Skip to main content

Posts

Showing posts from February, 2022

வெள்ளை ரோஜா

 இவள் வாடிய இதழ்களால் வீழ்ந்திடும் முன் பறித்தெறியப்பட்ட மலரும் மங்சள் குங்குமமும் #கவிபாடும்கவி

மையல்

 எழுதுவதற்க்காக நான் தீட்டிய மையில் மொத்தமாய் மெய்யாய் நீயே அவதரித்தாய் ஆயிரம் முறை உன்னை மறக்க  நினைத்தும் ஆழ் மனதில் ஆளுமை செய்கிறாயே ஆசைகள் யாவும் நீங்க மறந்தும் மறந்திடாதே மயக்கம் கொள்கிறதே இந்த மானுட மனமும் கூட © கவிபாடும் கவி

நிலா

 வெண்ணிற ஆடை போர்த்திய வெண்பனி நிலவும் மஞ்சள் மாலை பொழுதினிலே மயக்கம் கொண்டு மேகங்கள் கொண்டு மறைகிறதே உன் அங்கம் நிறம் கண்டு

நளினம்

 விடியாத இரவொன்று வேண்டும்  அதில் நீ வீசிடும் சுவாச காற்றில் குளிர் காய்ந்திட வேண்டும் ஆனந்த தாண்டவம் ஆடிட வேண்டும் அதில் உன் நளினங்களில் நனைந்திட வேண்டும் அதிகாலை வேளையிலும் அவஸ்தையாக உன் மீசை கம்பிகள் தீண்ட இதழ் முத்தம் வேண்டும்

மயக்கம்

 அவன் வசப்பட்ட ஸ்பரிசம் கொஞ்சம் அயர்ந்தே போனது அவன் தீண்ட தீண்ட தெவிட்டாத சீண்டலில்

கனா

 நிலா காய்ந்தே கவி பாடியதாம் மேகமே என்னை உரசிச் செல் என் குளுமை கொஞ்சம் கூடட்டும் கூடி இணைந்த உறவுகளில் கொஞ்சம் உரசல்கள் இணையட்டும் என்று

அவள்

 அவள் நளின நடனமும் நாணம் கொண்டே மறைத்த மாதுளை செவ்விதழ்கள் வெண்மேக கூட்டங்களில் மலை முகடுகளை தொட்டே மோகம் தீர்த்து தாகம் தணித்ததோ....

விழி

 அவள் கடைகண் பார்வையில் கனை தொடுத்தே காயம் காண்கிறாள் இமைக்க மறந்தும்